ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியும் பாதிக்கப்பட வாய்ப்பு ?- இதை கவனிச்சீங்களா ?

CSKvsMI
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்த வரையில் இந்திய அணியானது 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்திய அணி ஊழியர்களிடம் பரவிய கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

மேலும் கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்திய நிர்வாகி (பிசியோ) வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் இந்திய அணி வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி இன்று 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இந்திய வீரர்கள் 10 நாட்கள் வரை அங்கு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி அவர்கள் அங்கு தங்கி இருக்கும் பட்சத்தில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரின் ஆரம்ப சில நாட்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும் என்று தெரிகிறது.

Ganguly-ipl

ஏனெனில் 14வது ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள சீசன் வருகிற 19ம் தேதியில் இருந்து துவங்க உள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

bumrah

இதன்காரணமாக மும்பை அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் அப்படி இல்லை என்றால் இந்தப் போட்டியும் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதுதவிர சென்னை அணியின் முக்கிய வீரர் ஷர்துல் தாகூரும் தற்போது இந்திய அணி வீரர்களுடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement