சி.எஸ்.கே அணி வீரர்களின் குடுமபதினருக்கு செக் வைத்த அணி நிர்வாகம் – விவரம் இதோ

Ziva
- Advertisement -

இந்தியாவில் தனது தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க முடியாது என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.

ipl

- Advertisement -

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே எப்போதும் ஒரு குடும்பம் போன்றது என்று சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலான வீரர்கள் மூத்த வீரர்கள் என்பதால் அவர்கள் தங்களது குடும்பத்துடன் மைதானத்திற்கு வருவார்கள். போட்டி முடிந்த பின்னரும் வீரர்கள் குடும்பத்தினருடன் மைதானத்திற்குள் இருப்பார்கள்.

குறிப்பாக தோனியின் மகள் ஜிவா தோனி மற்றும் வாட்சன் குழந்தைகள், ரெய்னாவின் குழந்தை, இம்ரான் தாஹிர் ஆகியோர் குழந்தைகள் என அனைவரும் செய்யும் சேட்டைகளும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். அதே போன்று தோனியின் மனைவி, சுரேஷ் ரெய்னா மனைவி என கேலரியிலிருந்து போட்டிகளை நேரில் பார்த்து விசிலடித்து ரசிகரர்களுடன் அணிக்காக ஆரவாரம் செய்வார்கள்.

csk family 1

ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அரசு சார்பாக தெரிவித்துள்ளது. மேலும் வீரர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வீரர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது, உணவு உண்ணக்கூடாது, குளிர்பானம் அருந்தக்கூடாது என அனைத்திலுமே கட்டுப்பாடு உள்ளது.

csk family

மேலும் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அழைத்து செல்லக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது மேலும் இது குறித்து பேசிய காசி விஸ்வநாதன் கூறுகையில் : குடும்ப உறுப்பினர்கள் தொடரின் முதல் பாதியில் அணியுடன் அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் மேலும் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement