வெறித்தனமான பேட்டிங் ! ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபியை முந்தி வேற லெவல் சாதனை படைத்த சென்னை

RcbvsCsk
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக மீண்டும் எம்எஸ் தோனி திரும்பியுள்ளது மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா தலைமையில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த அந்த அணி ஏற்கனவே 6 தோல்விகளை பெற்றதால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தனக்குத்தானே குறைத்து கொண்டது.

- Advertisement -

அதைவிட அனுபவமில்லாத கேப்டன் பொறுப்பை ஏற்றதும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மொத்தமாக சொதப்பிய ஜடேஜா இந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே ஒப்படைத்து விட்டார். அந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மே 1-ஆம் தேதி நடைபெற்ற தனது 9-வது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

அதுவரை தடுமாற்றம் ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை நேற்று தோனி திரும்பியதும் அதே பழைய வெற்றி நடைபோடும் சென்னையாக காட்சியளிக்க தொடங்கியுள்ளதால் எஞ்சிய 5 போட்டிகளிலும் இதேபோல் தொடர் வெற்றி பெற்று அதிர்ஷ்டத்தின் உதவியுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

வெறித்தன பேட்டிங்:
முன்னதாக புனே நகரில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் மார்கோ யான்சென், நடராஜன், உம்ரான் மாலிக் என தரமான பவுலர்கள் அடங்கிய ஹைதராபாத்தை ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்து ரன்களை குவிக்கத் தொடங்கினார். பவர்பிளே முடிந்தும் பவர் குறையாக இந்த ஜோடியில் குறிப்பாக அதிக அதிரடி காட்டிய ருதுராஜ் உம்ரான் மாலிக் வீசிய 145 கி.மீ வீசிய பந்துகளில் அசால்டாக பவுண்டரி அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய இந்த ஜோடி அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அதிரடியை தொடர்ந்த நிலையில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 (57) ரன்கள் எடுத்த ருதுராஜ் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற வரலாற்று சாதனை படைத்தது. இறுதியில் டேவோன் கான்வே தனது பங்கிற்கு 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 85* (54) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 202/2 என்ற மிகப் பெரிய ஸ்கோரை சென்னை எட்டியது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

ஹைதெராபாத் போராட்டம்:
அதை தொடர்ந்து 203 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத் 20 ஓவர்களில் முடிந்த அளவு முயற்சித்த போதிலும் 189/6 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோற்றது. அந்த அணிக்கு அபிஷேக் சர்மா 39 (24) வில்லியம்சன் 47 (37) ஆகிய தொடக்க வீரர்கள் அதிரடியாக 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் அதை வீணடிக்கும் வகையில் அடுத்து வந்த ராகுல் திரிபாதி 0 (1) ஐடன் மார்க்ரம் 17 (10) ஷஷாங்க் சிங் 15 (14) வாசிங்டன் சுந்தர் 2 (2) போன்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

இறுதியில் தனி ஒருவனை போல நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரி 6 சிக்சரை பறக்கவிட்டு 64* (33) ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் அவரின் போராட்டம் வீணானது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகள் எடுக்க 99 ரன்களில் ஆட்டமிழந்தாலும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ருத்ராஜ் கைக்வாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

200களின் கிங்:
முன்னதாக இந்த போட்டியில் வெறித்தனமாக பேட்டிங் செய்த சென்னை 202 ரன்களைக் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுத்து விட்டால் கிட்டத்தட்ட அப்போதே வெற்றி உறுதியாகிவிடும். அதிலும் முதல் இன்னிங்சில் 200 எடுத்து விட்டால் அதன்பின் ஓரளவு நன்றாக பந்து வீசினாலே வெற்றியை பெற்று விடலாம் என்ற மிகப்பெரிய தைரியத்தை அடுத்ததாக 2-வது இன்னிங்ஸ்சில் அதை கட்டுப்படுத்த பந்து வீசும் பவுலர்களுக்கு மனதளவில் மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்து வெற்றியை எளிதாக்கிவிடும்.

இதையும் படிங்க : யாரையும் குறை சொல்ல முடியாது. கேட்ச்சை விடாம பிடிக்கணுனா இதை செய்ஞ்சே ஆகனும் – அறிவுரை கொடுத்த ரெய்னா

அந்த வகையில் நேற்றைய போட்டியில் 202 ரன்கள் குவித்த சென்னை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த அணி என்ற பெங்களூருவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல் இதோ:
1. சென்னை சூப்பர் கிங்ஸ் : 22*
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 21
3. மும்பை இந்தியன்ஸ் : 16
4. பஞ்சாப் கிங்ஸ் : 15
5. கொல்கத்தா/ராஜஸ்தான் : 14

Advertisement