20 வயது ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்த சி.எஸ்.கே – எதற்காக இந்த திட்டம்

CSK-Owner
- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீப வருடங்களில் இந்த தலைசிறந்த பவுலர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றனர். ரஷித் கான் , முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் போன்ற பவுலர்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அனைத்து வகை உலக டி20 லீக் தொடர்களிலும் பங்கேற்க அனுமதி அளித்து வருகிறது. ஆப்கனிஸ்தான் பந்து வீச்சாளர்களும் அதற்கேற்ப தங்களது திறமையை காண்பித்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.

fazalhaq

- Advertisement -

அந்த வரிசையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் 20 வயதேயான இளம் வேகப்பந்து வீச்சாளரான ஃபஸல்ஹாக் ஃபாரூகி. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக தனது முதல் டி20ஐ போட்டியில் விளையாடி உள்ளார். அறிமுகமான முதல் போட்டியிலேயே ஒரு விக்கெட் எடுத்ததோடு மட்டுமல்லாமல் 4 ஓவர்களை வீசி வெறும் 27 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

வெறும் ஒரு சர்வதேச டி20ஐ போட்டியில் மட்டும் விளையாடிய ஃபஸல்ஹாக் ஃபாரூகியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் பவுலர் ஆக தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்தும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வாழ்த்து பதிவு இட்டுள்ளது. 20 வயதான ஃபஸல்ஹாக் ஃபாரூகி இதுவரை 12 பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 22 பஸ்ட் கிளாஸ் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் அவரது எக்கானமி 3.27 ஆகும்.அதற்கு அடுத்தபடியாக 6 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் , மேலும் அவரது எக்கானமி 6.27 ஆகும்.
இவ்வளவு கம்மி போட்டிகளில் விளையாடியுள்ள ஃபஸல்ஹாக் ஃபாரூகியை எந்த அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் பவுலராக தேர்ந்தெடுத்துள்ளது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Fazalhaq-Farooqi

கிரிக்கெட் வல்லுனர்கள் சிலர் இவரிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை அதிகாரிகளையும் கோச்சையும் கவர்ந்துள்ளது. எனவேதான் அவர் நெட் பலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement