ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டி புனேவில் நேற்று(மே 20) நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி.இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது. பின்னர் களமிறங்கி சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியில் முதல் மூன்று வீரர்களும் ஒற்றை படை ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியில் அதிகபட்சமாக நாயர் 54 ரன்களும். மனோஜ் திவாரி 35 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 முதல் 9 ரன்கள் வரை கொடுக்க, இங்கிடி மட்டும் 4 ஒவர்களை வீசி 10 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒரு பக்கத்தில் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி கொடுத்திருக்க இந்த போட்டியில் 8 வது ஓவரை சர்துள் தாகூர் வீசினார். அப்போது திவாரி அடித்த 5 வது பந்து ஜடேஜாவிடம் சென்றது, அதனை எடுத்து ரன் அவுட் செய்ய வீசிய போது அது ஸ்டாம்பில் இருந்து விலகி ப்ராவோவிடம் சென்றது.
பின்னர் ப்ராவோவும் பந்தை எடுத்து அவுட் செய்ய ஸ்டம்பை நோக்கி வீச அந்த பந்தை தோனியும், ராயுடுவும் பிடிக்க தவறினார். பின்னர் நேராக பந்து பில்லிங்ஸிடம் சென்றது. பந்து இங்கும் அங்கும் மாறி மாறி சென்றதற்குள்ளாக திவாரியும், மில்லரும் 3 ரன்களை ஓடி எடுத்து விட்டனர். இதனால் கேப்டன் கூல் உட்பட பந்தை தவறவிட்ட அத்தனை பேரும் கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.