IPL 2023 : இவங்களா கம்பேக் கொடுக்க போறாங்க? காலிஸ் முதல் கைஃப் வரை – 12 முன்னாள் வீரர்களின் கணிப்பை பொய்யாகிய சிஎஸ்கே

CSK vs DC WIn
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய லீக் சுற்றில் முடிவில் 14 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 17 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது. குறிப்பாக 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை இதுவரை களமிறங்கிய 14 சீசனில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வெற்றி நடை போடும் அணியாக தங்களை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னதாக 2018இல் தடையிலிருந்து திரும்பிய போது பெரும்பாலும் மூத்த வீரர்களுடன் களமிறங்கிய சென்னையை டாடி ஆர்மி என்று எதிரணி ரசிகர்கள் கலாய்த்தனர். ஆனால் இளம் வீரர்களை கொண்ட இதர அணிகளை காட்டிலும் தோனி தலைமையில் அபாரமாக செயல்பட்டு 3வது கோப்பையை வென்ற அந்த அணி அனுபவமே சிறந்தது என்பதை நிரூபித்து 2019இல் ஃபைனல் வரை சென்றது. இருப்பினும் அதே அனுபவமிக்க வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் 2020இல் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்ட சென்னை 2021இல் மீண்டும் கொதித்தெழுந்து அபாரமாக செயல்பட்டு 4வது கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

பொய்யாக்கிய சென்னை:
ஆனால் மீண்டும் கடந்த வருடம் தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில் ருதுராஜ் போன்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டதுடன் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் கொடுத்த தேவையற்ற முடிவும் சென்னைக்கு தொடர் தோல்விகளை கொடுத்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பரிசளித்தது. அந்த நிலையில் கிட்டத்தட்ட அதே அணியுடன் இந்த சீசனில் தோனி களமிறங்கியதால் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாது என்று நிறைய எதிரணி ரசிகர்கள் கணித்தனர்.

அதை விட லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடும் அணியாக சென்னை இருக்காது என்று இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக நிறைய முன்னாள் வீரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கணித்தனர். அதாவது இத்தொடரின் ஆரம்பத்திலேயே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சார்பாக இந்த சீசனில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது கேள்வியாக கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு தென்னாபிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் என்றும், ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹசி ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்றும், வெஸ்ட் இண்டீஸின் டேரன் கங்கா பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் என்றும், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்றும், ஆரோன் பின்ச் குஜராத் டைட்டன்ஸ் – பெங்களூரு என்றும், இந்தியாவின் ஸ்ரீசாந்த் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – பெங்களூரு என்றும் பதிலளித்து கணித்தனர்.

அதே போல் முன்னாள் இந்திய வீரர் சந்திப் பாட்டில் குஜராத் – பெங்களூரு என்றும், தீப்தாஸ் குப்தா பெங்களூரு – குஜராத் என்றும், சஞ்சய் மஞ்ரேக்கர் ராஜஸ்தான் – பெங்களூரு என்றும், இர்ஃபான் பதான் பெங்களூரு – ராஜஸ்தான் என்றும், முகமது கைஃப் பெங்களூரு – லக்னோ என்றும், முன்னாள் இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் லக்னோ – ராஜஸ்தான் என்றும் கணித்தனர். ஆனால் அந்த 12 முன்னாள் கிரிக்கெட்டர்களில் யாருமே சென்னை டாப் 2 இடங்களில் ஒன்ராக இருக்கும் என்று சொல்லவில்லை. இருப்பினும் முதல் போட்டியிலேயே குஜராத்திடம் தோற்று தன்னுடைய கோட்டையான சேப்பாக்கத்திலும் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகளிடம் தோற்ற சென்னை எதற்கும் அசராமல் தேவையான வெற்றிகளை பதிவு செய்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படிங்க:வெறும் 2 போட்டியில் விளையாடவா இவரை சேத்தீங்க. சென்னை அணியில் இருந்து வெளியேறிய வீரரை – வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

அதனால் அந்த 12 முன்னாள் வீரர்களையும் பிராவோ பேஸ்புக்கில் கலாய்த்துள்ளார். மொத்தத்தில் “இவங்கல்லாம் எங்கே சாதிக்க போறாங்க” என்ற வகையில் கணித்த முன்னாள் வீரர்களின் கணிப்பை பொய்யாக்கிய சென்னை அடுத்ததாக மே 28இல் தங்களுடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் நடப்பு சாம்பியன் குஜராத்தை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்து ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement