கொரோனாவால் ஐ.பி.எல் தொடருக்கு மட்டுமல்ல. சென்னை அணிக்கும் ஏற்பட்ட பாதிப்பு -ரசிகர்கள் கவலை

CSKShop
- Advertisement -

இந்தியாவில் 13 ஆவது சீசனாக ஐபிஎல் போட்டிகள் இந்த மார்ச் 29ஆம் தேதி முதல் துவங்க இருந்தன. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருந்தன.

CskvsMi

- Advertisement -

இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக இன்று உலகம் முழுவதும் பெரிய அளவில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் இதன் தாக்கம் காணப்படுவதால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா வைரஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிவேகமாகப் பரவும் என்பதால் போட்டிகளை தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தேவை ஏற்பட்டால் இந்த தொடரை ரத்து செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Dhoni

இந்நிலையில் பணம் கொழிக்கும் தொடரான ஐபிஎல் தொடரை கொரோனா பாதிப்பால் தள்ளி வைத்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் ஐபிஎல் தொடர் நடைபெறும் இந்த ஒன்றரை மாதங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கும். கடந்த பலவருடங்களளை போன்று இந்த வருடமும் ஐ.பி.எல் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இந்தத் தொடருக்காக ஏற்கனவே 2 ஆம் தேதி முதல் பயிற்சியை மேற்கொண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 19 ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட இருந்தனர்.

Dhoni-Csk

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அவர்களது பயிற்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரையும் பி.சி.சி.ஐ ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement