சாம்பியன் அணியான சி.எஸ்.கே ல இருந்தும் ஒரே ஒரு போட்டியில் கூட விளையாடாத – அதிர்ஷ்டமில்லா 5 வீரர்கள்

csk
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டும், ஆனால் ஒருமுறைகூட போட்டியில் விளையாட விளையாடாத வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம். இந்தியாவில் 13வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கியிருக்க வேண்டியது. ஆனால், கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்காது என்பது நிரூபணமாகிவிட்டது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட தேர்வாகி, ஆனால் ஒரு போட்டியில் கூட களத்தில் இறங்கி ஆட முடியாமல் இருந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

மேட் ஹென்ரி :

நியூசிலாந்து அணியில் மிக வேகமாக வளர்ந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் வீசும் அசுர வேகத்திற்க்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2014 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த வருடம் முழுதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கைல் அப்பாட் :

தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர். கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வெளிநாட்டு வீரர்களை பேட்ஸ்மேன்களாக மட்டுமே வைத்து பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் இவருக்கு விதிவிலக்கு கிடைக்கவில்லை. இவரையும் ஒரு போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட வைக்கவில்லை. மேலும், பிரண்டன் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் இடம்பெற்றதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் சென்று அதற்கு அடுத்த வருடம் அந்த அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

tye

அகிலா தனஞ்ஜயா :

இவர் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் இவர் இவரை கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எப்படியும் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். ஏனெனில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை வீழ்த்திவிட்டு இடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடிப்பது என்பது சிறிய காரணம் காரியம் இல்லை. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இடையில் இவருக்கு இடம் கிடைக்காமல் போனது.

- Advertisement -

ஆண்ட்ரூ டை :

ஆஸ்திரேலிய அணியின் டி20 புலி இவர் . அதற்காகவே இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2015ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது. முதல் போட்டிக்கு முன்பாக காயமடைந்தார். இதன் காரணமாக அவரால் அணியில் ஆட முடியவில்லை. இதனால் அந்த தொடர் முழுவதும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் பல்வேறு அணிகளுக்காக களம் இறங்கி அசத்தினார்.

dhonipathan

இர்பான் பதான் :

இந்திய அணியின் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இவர். ஒரு காலத்தில் அடுத்த கபில்தேவ் என்று பாராட்டப்பட்டவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்பாக பஞ்சாப், டெல்லி, சன்ரைசர்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி 98 போட்டிகளில் பங்கேற்ற பின்னர்தான் இங்கு வந்தார். முதல் போட்டிக்கு முன்பாக அவர் காயமடைந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட முடியவில்லை.

Advertisement