- Advertisement -
ஐ.பி.எல்

தல தோனிக்கு மாற்றுவீரர் இவர்தானா? சி.எஸ்.கே அணிக்குள் வரவிருக்கும் 19 வயது விக்கெட் கீப்பர் – யார் இவர்? என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது. இனிவரும் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை அணி வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதனால் இந்த ஆண்டு சென்னை அணிக்கு மிக மோசமான ஆண்டாக மாறியுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியை வலிமைப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சி.எஸ்.கே அணி ஒப்பந்த செய்யவுள்ள 19 வயது விக்கெட் கீப்பர் :

அந்த வகையில் ஏற்கனவே சி.எஸ்.கே அணியின் எதிர்கால கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என்பதனால் அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையிலேயே ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே போன்ற வீரர்கள் அணிக்குள் வந்தனர். அதுமட்டும் இன்றி தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டேவால்டு பிரேவிசும் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக இளம் வீரர்களை சிஎஸ்கே அணி கொண்டு வர காரணம் யாதெனில் : ருதுராஜ் கெய்க்வாட்டின் கீழ் இளம் வீரர்களை கொண்டு வந்தால் அவர்களை சரியாக வழி நடத்த முடியும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதோடு தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் அவரும் சரியான மாற்று வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துவிட்டு வெளியேறுவார் என்று தெரிகிறது.

அந்த வகையில் சென்னை அணிக்குள் தற்போது பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில் தோனிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேடல் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தோனிக்கு மாற்று வீரராக 19 வயது வீரர் கார்த்திக் சர்மா என்பவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது ஸ்பெஷல் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அதன்படி ராஜஸ்தான் அணி சார்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் கார்த்திக் சர்மா ஏற்கனவே நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் 26 சிக்ஸர்களை விளாசி பிரமாதப்படுத்தி இருந்தார். அதோடு ராஜஸ்தான் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 167 ஸ்ட்ரைக் ரேட்டில் 201 ரன்களை குவித்திருந்தார். அதுமட்டுமின்றி ரஞ்சி தொடரின் அறிமுக போட்டியிலேயே 115 பந்துகளில் 113 ரன்கள் குவித்து வியக்க வைத்திருந்தார். இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ஆர்சிபி அணி பயிற்சியும் வழங்கியிருந்தது.

இதையும் படிங்க : இந்த வருஷம் ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கபோகும் டீம் அதுதான்.. தனது விருப்பத்தை தெரிவித்த – யுவ்ராஜ் சிங்

அப்படி நடத்தப்பட்ட ஆர்சிபி ட்ரையல்ஸ்சில் கார்த்திக் சர்மா அடித்த இமாலய சிக்ஸர்கள் பலரையும் ஈர்த்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு தற்போது சிஎஸ்கே முகாமிற்கு வந்து ட்ரையல்ஸ்சில் ஈடுபட்ட அவர் மிகச்சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி இமாலய சிக்ஸர்களை பறக்கவிடும் திறமை கொண்ட வீரராக இருப்பதனால் அவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -