ஏலத்திற்கு முன்னர் சென்னை அணியில் இருந்து நீக்கப்படும் முதல் வீரர் இவர்தான் – விவரம் இதோ

CSK-1

கடந்த ஆண்டு நடைபெற்ற 13வது ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக கேதர் ஜாதவ் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கேதர் ஜாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அனைவரும் கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இவர் கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 8 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் 5 இன்னிங்ஸில் விளையாடி 20.66 சராசரியை பெற்று வெறும் 62 ரன்களை மட்டுமே குவித்து இருந்தார். இவர் கடந்த சீசனில் அதிகபட்சமாக 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

Jadhav-2

அதுமட்டுமின்றி கடந்த சீசனில் மொத்தமாக அவர் 7 பவுண்டரிகள் மட்டுமே அடித்து ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 14வது ஐபிஎல் சீசனில் சென்னை அணி இவரை கண்டிப்பாக வெளியேற்றும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் 14 ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.

அதன்படி இந்த ஆண்டு வெறும் 8 அணிகள் மட்டுமே பங்கு பெற்று விளையாடும் என்று நிர்வாகம் அறிவித்திருந்தது. குறுகிய காலத்தில் புதிய இரண்டு அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்வது அதற்கான பணிகளை மேற்கொள்வது போன்ற சிக்கல்கள் இருப்பதால் 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடரை 2022ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

Jadhav 1

இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் 8 அணிகளும் தங்களது அணியில் இருந்து தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் நீக்கப்படும் வீரர்களை முடிவு செய்து ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

jadhav

இதனால் 8 அணிகளும் தங்களது அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கும் வீரர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நீக்கப்பட இருக்கும் வீரர்களை அறிவித்துள்ளது. சென்னை அணியில் நீக்கப்பட இருக்கும் முதல் வீரராக கேதர் ஜாதவை அறிவித்திருக்கின்றனர். இவரைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோரையும் சென்னை அணி நீக்கப்படுவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.