ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை சி.எஸ்.கே பர்ஸ்ட்.. ஆர்.சி.பி செகன்ட்.. – எதில் தெரியுமா? விவரம் இதோ

CSK-vs-RCB
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி மற்றும் அணிகளின் மதிப்பு உள்ளிட்ட பல தகவல்களை உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அவர்கள் மதிப்பீடு செய்து வெளியிட்ட ஆய்வு முடிவின் அடிப்படையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு விட 6.5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் ஐபிஎல் தொடரின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் மட்டும் 28,000 கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. அதோடு ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை என பல வகைகளில் ஐபிஎல் தொடருக்கு லாபம் குவிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை மதிப்புமிக்க அணியாக சிஎஸ்கே அணி பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே அணி மட்டும் 1930 கோடி மதிப்பு கொண்ட முதல் பிரான்சி அணியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக தோனி இருந்து வருகிறார்.

- Advertisement -

சி எஸ் கே அணியின் பெரிய வளர்ச்சிக்கு அவரது தலைமை மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது மதிப்புமிக்க அணியாக ஆர்சிபி அணி 1896 கோடி பிராண்ட் வேல்யூவை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : 4.230 ரன்ரேட்.. பப்புவா அணியை சுருட்டிய ஆப்கானிஸ்தான்.. சூப்பர் 8க்கு தகுதி.. 37 வருடம் கழித்து நியூஸிலாந்துக்கு சோகம்

இந்த மதிப்பீட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை விட சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் முதல் இரண்டு இடத்தில் உள்ளதற்கு காரணமாக அந்த அணிகளின் மீது ரசிகர்கள் வைத்துள்ள ஆதரவே பார்க்கப்படுகிறது.

Advertisement