2020 ஐ.பி.எல் முதலாவது நபராக சி.எஸ்.கே ஏலத்தில் எடுத்த வீரர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Csk
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 19ம் தேதி இன்று துவங்க உள்ளது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

auction-1

- Advertisement -

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் சென்னை அணியம் கலந்துகொண்டது. இந்த ஏலத்தில் சென்னை சி.எஸ்.கே அணி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளம் ஆல்ரவுண்டரான சாம் கரணை சி.எஸ்.கே முதல் வீரராக வாங்கியுள்ளது.

துவக்க விலையாக 1 கோடி ஏலத்தில் விடப்பட்ட சாம் கரணை வாங்குவதற்கு மற்ற அணிகளிடையே போட்டி ஏற்பட்டது. இருப்பினும் சென்னை அணியின் பயிற்சியாளரான பிளமிங் அவரை விடாது 550லட்சம் அதாவது 5.50 கோடிக்கு வாங்கினார். கடந்த ஆண்டு ஹாட்ரிக் வீழ்த்தி அசத்திய இவரை தோனி தலைமையிலான சென்னை அணி வாங்கியது.

ஏற்கனவே வெளிநாட்டு ஆல்ரவுண்டராக பிராவோ சென்னை அணியில் இருந்தாலும் மற்றொரு ஆல்ரவுண்டராக இளம்வீரரான இவர் மீது நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது. இருப்பினும் அனுபவம் மிக்க தோனி இந்த இளம்வீரரை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்பலாம்.

Advertisement