
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பிடித்துள்ளது. சென்னை அணியின் இந்த மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் விமர்சனத்தை பெரும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். அதன் காரணமாக நேற்று தோனியின் தலைமையில் களமிறங்கிய சென்னை அணி இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்களையும், விஜய் ஷங்கர் 29 ரன்களையும் குவித்தனர். மற்றபடி வேறுயெந்த வீரர்களும் பெரிய அளவில் சிறப்பாக விளையாடவில்லை.
அதனை தொடர்ந்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தோனி 9 வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கியது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.
ஏனெனில் அணியின் நலனுக்காக அவர் பின் வரிசையில் களமிறங்கி வருவதாக கூறியிருந்தாலும் போட்டியின் சூழலை கணக்கில் கொண்டு அவர் நேற்றைய போட்டியில் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதோடு ஏற்கனவே இந்த தொடரில் நான்கு தோல்விகளை சந்தித்த சென்னை அணியை மேலும் சரிவை சந்திக்க விடாமல் இருப்பதற்காக தோனி சில முடிவுகளை மாற்றி இருக்காம். கேப்டனாக அனைத்து உரிமைகளும் இருந்தும் தோனி மோசமான அணித்தேர்வை செய்துள்ளார்.
இதையும் படிங்க : தோனி இருந்தா மட்டும் சாதிச்சுருப்பாரா? சிஎஸ்கே மண்ணை கவ்வி 11.30 மணிக்கு வருவோம்.. கலாய்த்த சேவாக்
மேலும் தற்போது கேப்டனாக இருக்கும் அவர் நினைத்திருந்தால் எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கி இருக்கலாம். ஆனாலும் போட்டியின் ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகள் சரிவதை பார்த்துக்கொண்டு அடுத்தடுத்த வீரர்களை களமிறக்கும் தோனி தானாக முன்வந்து ஏன் டாப் ஆர்டரில் களமிறங்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.