இளம் சிஎஸ்கே வீரரிடம் ஜாம்பவானான நீங்க இப்படியா பண்ணுவீங்க.. விராட் கோலி மீது ரசிகர்கள் கோபம்

Virat Kohli vs RAchin
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் துவங்கியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 173/6 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தஃபீஸூர் ரகுமான் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் 174 ரன்களை துரத்திய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக புதிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தை சென்னை வெற்றிகரமாக துவங்கியது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக 30 ரன்கள் எடுக்க தவறிய பெங்களூருவுக்கு கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாக களமிறங்கிய 24 வயதாகும் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா காயமடைந்த டேவோன் கான்வேவுக்கு பதிலாக அதிரடியாக விளையாடினார்.

அந்த வகையில் 3 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு பவர்பிளே ஓவர்களில் பட்டாசாக விளையாடிய அவர் 37 (15) ரன்களை 246.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சிஎஸ்கே அணிக்கு தேவையான அதிரடி துவக்கத்தை கொடுத்து அவுட்டானார். ஆனால் அப்படி அவுட்டாகி சென்ற அவரை பவுண்டரி எல்லையில் அருகே இருந்த விராட் கோலி “வெளியே போ போ” என்ற வகையில் சில கெட்ட வார்த்தைகளை சொல்லி சைகை செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

- Advertisement -

குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையில் இந்திய வீரர் இஷான் கிசானை அவுட்டாக்கிய பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவூப் “வெளியே போ” என்று சைகை காட்டியதைப் போலவே விராட் கோலியும் அந்த தருணத்தில் நடந்து கொண்டார் என்றே சொல்லலாம். அதனால் ஏமாற்றமடைந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஜாம்பவான் வீரராக இருக்கும் நீங்கள் பெருந்தன்மையை காட்டாமல் 24 வயதாகும் இளம் வீரரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று சமூக வலைதளங்களில் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீங்க வேணா பாருங்க.. 2024 ஐ.பி.எல் தொடரின் பாதியிலேயே தோனி விலகுவார் – டாம் மூடி அதிரடி கருத்து

இருப்பினும் பொதுவாகவே விக்கெட் விழுந்தால் அதை விராட் கோலி வெறித்தனமாக கொண்டாடக் கூடியவர். எனவே தங்களுடைய வெற்றியை பறிக்கும் வகையில் ரச்சின் ரவீந்தரா விளையாடியதாலேயே அவுட்டானதும் விராட் கோலி அப்படி கோபமாக வழி அனுப்பினார் என்று பெங்களூரு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதில் எந்த தவறும் இல்லை என்று விராட் கோலிக்கு ஆர்சிபி ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement