மெகா ஏலத்தில் அக்கறை செலுத்தாமல் அலட்சியப்படுத்தும் சி.எஸ். நிர்வாகம் – கொந்தளிக்கும் ரசிகர்கள்

Auction
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 590 வீரர்கள் பங்குபெறும் இந்த ஏலத்தில் முதல் நாளன்று 74 வீரர்கள் வாங்கப்பட்டார்கள். அதிகபட்சமாக இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் 14 கோடிகளுக்கு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

hugh

- Advertisement -

அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் டேவிட் வார்னர், நிக்கோலஸ் பூரான் போன்றவர்கள் பெரிய தொகைக்கு ஒப்பந்தமானார்கள். மறுபுறம் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்களை எந்த அணியும் வாங்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தமிழக வீரர்கள்:
இந்த ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களையும் வாசிங்டன் சுந்தர், ஷாருக்கான் போன்ற இளம் வீரர்களையும் வாங்க அனைத்து ஐபிஎல் அணிகளும் கடுமையாக போட்டி போட்டன. ஆனால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை அடிப்படையாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தமிழக வீரர்களை வாங்க ஆர்வம் காட்டாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TN

பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகக் குறைந்த அளவு மட்டுமே தமிழக வீரர்கள் விளையாடி உள்ளார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய், சுப்ரமணியம் பத்ரிநாத் என கைவிட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே தமிழக கிரிக்கெட் வீரர்கள் சென்னை அணிக்காக விளையாடினார்கள். அதிலும் சமீபகாலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழக வீரர் இடம் பிடிப்பது என்பது அரிதினும் அரிதாக மாறிவிட்டது.

- Advertisement -

ஏமாற்றிய சென்னை:
நேற்று துவங்கிய இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழ்நாட்டிலிருந்து முதலாவதாக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரை வாங்குவதற்கு டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகள் கடும் போட்டி போட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை 5 கோடிகளுக்கு வெற்றிகரமாக வாங்கியது. ஆனால் 2010 போன்ற காலக்கட்டங்களில் தங்களுக்காக விளையாடிய போதிலும் அவரை வாங்குவதற்கு சென்னை அணி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

CSK-Auction

சரி அவர் தான் அப்படி என்று பார்த்தால் சென்னை அணிக்காக விளையாட ஆசையுடன் காத்திருப்பதாக மற்றொரு நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த பல வருடங்களாக கூறி வருகிறார். ஆனால் அவரையும் வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் போட்டி போட்டு 5.50 கோடிகளுக்கு வாங்கியது. சரி இவர்களுக்கு கூட வயதாகிவிட்டது என்பதால் வாங்கவில்லை என வைத்துக்கொள்வோம்.

- Advertisement -

கொந்தளிக்கும் ரசிகர்கள்:
ஆனால் தமிழகத்தின் இளம் பினிசராக இருக்கும் ஷாருக்கானையும் சென்னை வாங்காதது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தோனிக்கு பின்னர் சென்னை அணியில் ஒரு நல்ல பினிசெர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த வேளையில் ஷாருக்கானை எப்படியாவது சென்னை வாங்கி விடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அவரை வாங்க ஆர்வம் காட்டாத சென்னை நிர்வாகம் அவரின் தொகை ஏறியதால் 2 – 5 கோடிகளுக்கு மேல் கேட்காமல் பின்வாங்கியது. இறுதியில் அவரை 9 கோடிகள் என்ற மிரளவைக்கும் தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது.

sharukh

இதேபோலவே தமிழகத்தின் மற்ற நட்சத்திர வீரர்களான வாசிங்டன் சுந்தரையும், நடராஜனையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் முறையே 8.75 கோடிகள் மற்றும் 4 கோடிகளுக்கு போட்டி போட்டு வாங்கியது. அதேபோல மற்றொரு தமிழக வீரர் முருகன் அஸ்வினை மும்பை இந்தியன்ஸ் தட்டி தூக்கியது. ஆனால் சென்னை அணி நிர்வாகம் அவர்களை வாங்குவதற்கு எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை.

நம்பிக்கை இல்லையா:
இது கூட பரவாயில்லை. கடந்த வருடம் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், நாராயண் ஜெகதீசன் போன்ற இளம் தமிழக வீரர்கள் குறைந்தபட்சம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெஞ்சிலாவது அமர்ந்திருந்தார்கள். ஆனால் இந்த முறை குறைந்த விலையில் கிடைத்த அவர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கி பெஞ்சில் கூட அமர வைக்கவில்லை.

sharukh

மொத்தத்தில் இதுவரை நடைபெற்ற ஏலத்தில் ஒரு தமிழக வீரர்கள் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்காதது தமிழக ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் அதே தமிழக வீரர்களை மற்ற அணிகள் கடும் போட்டி போட்டு பல கோடி ரூபாய்களை செலவழித்து வாங்கியுள்ளன. அப்படியானால் தமிழக கிரிக்கெட் வீரர்கள் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கை இல்லையா என்ற நியாயமான கேள்வியை தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு தமிழக வீரர்களை கூட வாங்காத காரணத்தால் சென்னை அணி மீது தமிழக ரசிகர்கள் கடும் காட்டதுடன் கொந்தளிப்புடன் காணப்படுகிறார்கள்.

Advertisement