சென்னையில் இருந்து பயிற்சியை மும்பைக்கு மாற்றிய சி.எஸ்.கே அணி நிர்வாகம் – காரணம் இதுதான்

Dhoni-Csk
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30 வரை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் தற்போது இதிலிருந்து ஐபிஎல் லீக் தொடருக்கு தயாராகி வருகின்றது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்பே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்து பயிற்சியில் பங்கேற்று வந்தது. இந்நிலையில் தற்போது வருகிற 26ம் தேதி (நாளை) மும்பை செல்ல திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒவ்வொரு வருடமும் பிளே ஆப் சுற்றுக்கு குறைந்தபட்சம் தகுதி பெறும்.ஆனால் சென்ற வருடம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் போட்டிகளிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. எனவே இந்த முறை சிறந்த வகையில் பர்பாமன்ஸ் செய்ய இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது.

இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பே பயிற்சியை ஆரம்பித்து விட்டது. வலைப்பயிற்சியில் மகேந்திர சிங் தோனி , அம்பத்தி ராயுடு , ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் , ருத்ராஜ் , கரன் ஷர்மா , சாய் கிஷோர் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 10ஆம் தேதி தனது முதல் போட்டியில் டெல்லி அணியுடன் மோத இருக்கிறது. அந்த போட்டி மும்பையில் நடக்க இருக்கிறது. எனவே வருகிற 26-ஆம் தேதி சென்னை அணி மும்பை சென்று அங்கே வலை பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

csk vs dc

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலேயே இருக்கிறது .அதிலும் குறிப்பாக அதிக பட்சமாக ஐந்து போட்டிகள் மும்பையில் விளையாட இருக்கிறது. எனவே , முன்னரே சென்று அங்கே வலைப் பயிற்சியை மேற்கொண்டு அந்த மைதானத்துக்கு ஏற்ப வியூகங்களை வகுக்கவே சென்னை அணி முன்கூட்டியே செல்ல இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement