- Advertisement -
ஐ.பி.எல்

தேவால்ட் ப்ரேவிஸை அவங்கள மாதிரி.. தவற விடாம சிஎஸ்கே வாங்கியது மாஸ்டர்ஸ்ட்ரோக்.. ஏபிடி பாராட்டு

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி 2.45 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் சிறப்பாக பேட்டிங் செய்து 218/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக 4வது களமிறங்கி ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கிய தேவால்ட் ப்ரேவிஸ் தனது முதல் சதத்தை அடித்து 125* (56) ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பென் ட்வார்சுய்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். முன்னதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 22 வயதாகும் தேவால்ட் ப்ரேவிஸ் அண்டர்-19 மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தினார்.

- Advertisement -

சிஎஸ்கே மாஸ்டர்ஸ்ட்ரோக்:

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் மும்பை அணி அவரை வாங்கி வாய்ப்பு கொடுத்தது. இருப்பினும் அந்த வாய்ப்பில் தொடர்ச்சியாக அசத்தத் தவறியதால் அவரை மும்பை நிர்வாகம் கழற்றி விட்டது. 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. அந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் குர்ஜப்நீத் சிங் காயத்தால் வெளியேறினார்.

அவருக்கு பதிலாக சிஎஸ்கே நிர்வாகம் தேவால்ட் ப்ரேவிஸை மாற்று வீரராக வாங்கியது. அந்த அணியில் கிடைத்த வாய்ப்பில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரேவிஸ் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னையை வெற்றி பெற வைத்தார். அதே போல கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:

அதன் காரணமாக சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கட்டில் அறிமுகமான ப்ரேவிஸ் தற்போது இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக இளம் (22) வயதில் டி20 சதத்தை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் தவற விட்ட ப்ரேவிஸை சிஎஸ்கே வாங்கியது மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 12 போர்ஸ் 8 சிக்ஸ்.. 125 ரன்ஸ்.. ருதுராஜ் கெய்க்வாட், வாட்சனை முந்திய தேவால்ட் ப்ரேவிஸ் 3 உலக சாதனை

“ஐபிஎல் அணிகளுக்கு தேவால்ட் ப்ரேவிஸை ஏலத்தில் வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இருந்தது. ஆனால் அங்கே அவர்கள் அவரை தவற விட்டார்கள். அவரை சிஎஸ்கே ஒன்று அதிர்ஷ்டத்தால் வாங்கியிருக்க வேண்டும் அல்லது மிகப்பெரிய மாஸ்டர்ஸ்ட்ரோக் முடிவால் வாங்கியிருக்க வேண்டும். இந்தப் பையன் நன்றாக விளையாடுவான். சொல்லப்போனால் இந்தப் பையன் சிஎஸ்கே அணியாலும் ஏலத்தில் வாங்கப்படாமல் மாற்று வீரராக வாங்கப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -