ஐபிஎல் 2024 : தொடர் துவங்கும் முன்பே.. மும்பையின் ஓப்பனிங் சாதனையை உடைத்த சிஎஸ்கே.. அசத்தலான புள்ளிவிவரம்

CSK Team
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் விளையாடுகின்றன. இம்முறை இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் 2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை 2 பகுதிகளாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டும் வெளியிட்டுள்ள பிசிசிஐ எஞ்சிய அட்டவணையை தேர்தல் தேதியை மையப்படுத்தி அறிவிப்போம் என்று கூறியுள்ளது. அந்த அட்டவணையின் படி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஃப் டு பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

மும்பையை முந்திய சென்னை:
கடந்த வருடம் குஜராத்தை வீழ்த்தி 5வது கோப்பையை வென்ற சென்னை வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற தங்களின் பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. சமீப காலங்களாகவே முந்தைய வருடம் கோப்பையை வென்ற சாம்பியன் அணி அடுத்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இம்முறை சிஎஸ்கே தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள உள்ளது.

மேலும் இதற்கு முன் ஏற்கனவே 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022, 2023 ஆகிய வருடங்களில் நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய சென்னை தற்போது 2024 சீசனில் 9வது முறையாக ஓப்பனிங் போட்டியில் விளையாட உள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை முதல் போட்டியில் விளையாடிய அணி என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனை உடைத்துள்ள சென்னை புதிய சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் மும்பை 8 ஓப்பனிங் போட்டிகளில் விளையாடியதே முந்தைய சாதனையாகும். அந்த அணியை தொடர்ந்து கொல்கத்தா 7, பெங்களூரு 5 ஓப்பனிங் போட்டிகளில் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய 2வது போட்டியில் குஜராத்தை மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: 2024 டி20 உலகக் கோப்பையை அந்த அணி ஸ்பெஷலாக ஜெயிப்பாங்க.. திசாரா பெரேரா கணிப்பு

பின்னர் டெல்லியை விசாகப்பட்டினத்தில் மார்ச் 31ஆம் தேதி தங்களுடைய மூன்றாவது போட்டியில் எதிர்கொள்ளும் சென்னை 4வது போட்டியில் ஹைதராபாத்தை அதனுடைய சொந்த மண்ணில் ஏப்ரல் 5ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. எனவே இம்முறையும் தோனி தலைமையில் சிறப்பாக விளையாடி 6வது கோப்பையை வென்று மும்பையை முந்தி சென்னை வரலாறு படைக்குமா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement