- Advertisement -
ஐ.பி.எல்

சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இரு அணி வீரர்கள் – என்ன காரணம்?

ஏப்ரல் 14-ஆம் தேதியான நேற்று நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியின் இறுதியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள் : என்ன காரணம்?

இவ்வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது சென்னை அணியின் வீரர்களும் சரி, கொல்கத்தா அணியின் வீரர்களும் சரி, இரு அணியின் வீரர்களுக்குமே கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது. பொதுவாகவே முன்னாள் வீரர்களின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இதேபோன்று கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது வழக்கமான ஒன்று.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணியின் வீரர்களுமே கருப்பு பட்டை அணிந்து விளையாட காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சி.டி கோபிநாத் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலுமே நேற்று இரு அணி வீரர்களும் கருப்பு பட்டையை அணிந்து விளையாடினர்.

சி.டி கோபிநாத் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 1952-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது விளையாடியிருந்த அவர் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றியிலும் பங்கேற்ற இந்திய வீரர் ஆவார். இப்படி இந்தியா பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியில் இடம் பெற்றிருந்த கடைசி வீரராக உயிருடன் இருந்த அவர் 96 வயதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார்.

- Advertisement -

இதையும் படிங்க : 5 போட்டியில் ஒன்றில் கூட ஜெயிக்கல.. இதுபத்தாம கொல்கத்தா கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் – என்ன நடந்தது?

எனவே அவரது பங்களிப்பை போற்றும் விதமாகவும், அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலேயே வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடியுள்ளனர். இந்திய அணிக்காக விளையாடியது மட்டுமின்றி மெட்ராஸ் மாநில அணிக்காக 60 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முதல் முறையாக ரஞ்சி கோப்பை வென்றபோதும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -