மீண்டும் மும்பை மைதானத்தில் எழுந்த “தோனி தோனி” என்கிற சத்தம் – வைரலாகும் வீடியோ

Rahul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் பண்ட் பேட்டிங் செய்யும்போது கம்மின்ஸ் வீசிய பந்தில் தலையில் அடி வாங்கி அவுட்டாகி சென்றார். இதனால் அவருக்கு மூளையில் சற்று அதிர்வு ஏற்பட்டதாகவும் அதன்படி சிகிச்சை காரணமாக அவர் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது கீப்பிங் செய்ய வரவில்லை. ராகுல் விக்கெட் கீப்பராக இந்த போட்டியில் செயல்பட்டார்.

மேலும் அவ்வப்போது ராகுல் கீப்பிங் செய்து வருவதால் அவரால் சிறப்பாக கீப்பிங் செய்ய முடியவில்லை. வார்னர் தவறவிட்ட ஒரு எளிய பந்தை ஸ்டம்பிங் செய்ய தவறியதுடன் அந்த பந்தை பவுண்டரிக்கு விட்டார். இதனை கண்ட ரசிகர்கள் மீண்டும் தோனியின் பெயரை சத்தமாக “தோனி தோனி” என்று கத்த ஆரம்பித்தனர்.

ராகுலும், இந்திய வீரர்களும் அந்த சத்தத்தை கேட்டு சற்று திகைப்போடு இருந்தனர். ஏற்கனவே பண்ட் கீப்பிங்கில் சொதப்பும் போது ரசிகர்கள் இதேபோன்று நடந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.