கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை எப்போதும் அவர்கள் தங்களது விளையாட்டில் கவனமுடன் இருக்க வேண்டும். இதற்காக அவர்கள் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருவார்கள் . ஆனால், அவர்கள் எப்போதும் கிரிக்கெட் சம்மந்தபட்ட பயிற்சிகளை தான் மேற்கொள்வார்களா? இல்லை, அவர்கள் தங்களை ஆயுதப்படுத்திக் கொள்ள வேறு சில உத்திகளையும், விளையாட்டுகளையும் பின்பற்றி தான் வருகின்றார்கள்.பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் முன்னர் எப்படி தங்களை தயார் செய்து கொள்கிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிற விளையாட்டை விளையாடுவது.
நீங்கள் பல முறை பார்த்திருக்கலாம், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் முன்னர் பயிற்சயில் இருக்கும் வீரர்கள் கால் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சரி, கிரிக்கெட்டிற்கும் கால் பந்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா. கிரிக்கெட்டை தாண்டி வீரர்கள் தங்களின் கவனத்தை கூர்மையாக வைத்துக் கொள்ள வேறு ஏதாவது அவர்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுவார்கள், அவ்வாறு ஈடுபடுவதினால் அவர்களின் கவனம் சீராக பராமரிக்க படுகிறது. கிரிக்கெட் வீரரான தோனி கிரிக்கெட்டுக்கு பின்னர் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டுவார்.
மனம் சார்ந்த பயிற்சிகள்
கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல மற்ற விளையாட்டில் இருக்கும் வீரர்களுக்கும் மனம் சார்ந்த பயிற்சிகள் மிக முக்கியம். கிரிக்கெட் வீரர்களுக்கு காட்சிப்படுத்தும் திறனும், சுய உரையாடல் திறனும் மிக முக்கியம். இந்த இரு திறனும் தான் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். காட்சிப்படுத்தும் திறன் போட்டியில் எப்படி ஆடுவது, பந்தை எப்படி வந்தால், எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்று பல்வேறு சிந்திக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
சக வீரர்களுடன் அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவது.
தன்னுடன் விளையாடும் சக வீரர்களுடன் சேர்ந்து ஒன்றாக வீடியோ கேம் விளையாடுவதன் மூலம், வீரர்களுடன் ஒரு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் பந்து வீச்சாளர்களுக்கு அது ஒரு நல்ல விரல் பயிற்சியாகவும் அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் விர்த்திமான் சஹா ஆகிய இருவரும்,எந்த சுற்றுப்பயணம் சென்றாலும் தங்களுடன் வீடியோ கேம் கிட்களை எடுத்து செல்வார்கள்’ என்று விராட் கோலி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.