கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Corona-1
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து உருவான இந்த வைரஸ் தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. 150 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெகுவேகமாக எடுத்து வருகிறது.

corona 1

- Advertisement -

தற்போது வரை உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 4000 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் இந்த வைரஸ் அதிகமாகிக் கொண்டே இருக்கும் வேளையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கிரிக்கெட் போன்ற பெரும் விளையாட்டு போட்டிகள் தனி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மஜீத் ஹக்கிற்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Majid 1

இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நிக்கோலஸ் பெர்குசன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதானை செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மஜீத் ஹக்கிற்கு இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடிய அனைத்து வீரர்களுக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டு அவர்களும் தற்போது தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement