தோனிக்கு சோகத்துடன் வாழ்த்து தெரிவித்த சாக்‌ஷி தோனி..! காரணம் இதுதான்..?

dhoni1
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது 37-வது பிறந்தநாளை இன்று (ஜூலை 7 ) கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.

dhoni

இங்கிலாந்து அணிவுடனான தொடரில் விளையாட தற்போது தோனி இங்கிலாந்து மண்ணில் இருக்கிறார். இதனால் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட இங்கிலாந்து சென்றார் சாக்ஷி. நேற்று நள்ளிரவு கேக் வெட்டி தோனி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி.

- Advertisement -

மேலும், தனது கணவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ள சாக்ஷி “நீங்கள் எப்படி பட்ட மனிதர் என்பதை வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. இந்த 10 ஆண்டுகளில் உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. கற்றுக் கொள்வேன்.. வாழ்க்கையை நேர்மறையாக, எளிதாக எதிர்கொண்டு வாழ எனக்கு கற்றுக்கொடுத்தற்கு நன்றி. எனது வாழ்வை அழகாக மாற்றியதற்கு நன்றி” என்று தனது கணவருக்கு அழகாக பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துளளார்.


தோனியின் பிறந்த நாளை சக வீரகளான ரெய்னா, கோலி, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், இந்த பிறந்தநாள் கொண்டாடத்தில் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement