- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் தொடங்கிய அன்று 6 வயதுதான்…இப்போது T20 போட்டியின் ஹீரோஸ் – இதில் சென்னை வீரர் யார் தெரியுமா ?

2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் டி20 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்பம் முதலே அமோக வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடர் அடுத்தடுத்த சீசன்களில் இன்னும் பிரபலமானது.உலகில் நடைபெறும் முக்கிய டி20 தொடர்களில் முதன்மையானதாக இந்திய ஐபிஎல் தொடர் திகழ்கின்றது.இந்நிலையில் 11வது ஐபிஎல் சீசன் நாளை (ஏப்ரல் 7, 2018) முதல் தொடங்கப்படவுள்ளன.

நாளை இரவு நடைபெறவுள்ள முதல்போட்டியில் மும்பை அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது சென்னை அணி.இந்நிலையில் ஐபிஎல் முதல் சீசனின் போது பள்ளிக்கூடத்தில் 2ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்த ஐபிஎல் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக விளையாடவுள்ளனர். இவ்வளவு இளம்வயதில் இது எப்படி சாத்தியமானது !! வாருங்கள் பார்க்கலாம்.

- Advertisement -

சுபமான் கில்.

ஐபில் முதல் சீசன் 2008ம் ஆண்டு தொடங்கியபோது பஞ்சாபில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தவர். இளம்வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வமிருந்ததால் 19வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பெற்று உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். இளம் பேட்ஸ்மேனின் இந்த திறமையை கண்டுபிடித்து கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் சீசனில் இவரை 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கமலேஷ் நாகர்கோட்டி.

2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கப்பட்ட போது மூன்றாம் வகுப்பில் படித்துவந்த இவருக்கு தற்போது 18 வயது.இவரும் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக பந்துவீசி செயல்பட்டதால் கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் சீசனில் 3.2 கோடி ரூபாய்க்கு இவரை விலைக்கு வாங்கியுள்ளது.இவர் வளர்ந்துவரும் வேகப்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரித்வி ஷா.

19வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர்தான் இளம் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை கேப்டனாக வென்று தந்தவர். 18வயது கூட நிரம்பாத இளம்வீரரான இவரை இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணி 1.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.முதல் ஐபிஎல் சீசன் தொடங்கியபோது இவரும் மும்பையில் ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தவர்தான்.

- Advertisement -

முஜீப் ஹர் ரஹ்மான்.

இதுவரை பார்த்த வீரர்களை விடவும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம்வீரரான இவர் 2008ம் ஆண்டின் ஐபிஎல் முதல் சீசனின் போது அங்குள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தவர்.இவரது அற்புதமான ஆட்டத்தின் காரணமாக பஞ்சாப் அணி இந்த இளம் வீரரை 4கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அதிர்ச்சியளித்தது.

சந்தீப் லெமிச்சனே.

நேபாளில் இருந்து இந்திய ஐபிஎல்-இல் விளையாடவுள்ள முதல்வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான இவரும் முதல் ஐபிஎல் சீசனின் போது முதலாம் வகுப்பு படித்து வந்தவர் தானாம்.18வயது கூட நிரம்பாத இவரை டெல்லி அணி 20இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட வாஷிங்டன் சுந்தர் வளரும் இளம் நட்சத்திரமாக இந்திய அணியில் ஜொலிப்பவர். தான் விளையாடிய முதல் தொடரிலேயே சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருதை பெற்று அசத்தியவர்.பேட்டிங்கிலும்,பவுலிங்கிலும் அசத்திவரும் இவரை இந்த ஐபிஎல்-இல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

முதல் ஐபிஎல் சீசனின் போது இவரும் சென்னையில் ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தவரே.முதல் ஐபிஎல் சீசனில் பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த இளம் பட்டாளம் ஒன்று இந்த ஐபிஎல்-இல் இறங்கி கலக்க காத்திருக்கின்றது.மூத்த வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல் சீசனில் ஓரங்கட்டப்பட்டு இளம் வீரர்கள் எதிர்பார்த்ததை விட அதிக கொகைக்கு அணி உரிமையாளர்களால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர்.

அணி உரிமையாளர்களின் புதிய முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்று இந்த ஐபிஎல் சீசனில் தெரிந்துவிடும்.அதேவேளையில் முதல் ஐபிஎல் சீசனில் களமிறங்கப் போகும் அனைத்து இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை வெளிப்படுத்திட கிரிக் தமிழ் சார்பாக வாழ்த்துகள்.

- Advertisement -