81 வயதிலும் ரிட்டையர்ட் ஆகாத கிரிக்கெட் வீரர்..! – யார் தெரியுமா..?

billlawry
- Advertisement -

விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் வேறு எதாவது வேலைகளின் தங்களது பாதையை தொடர்வார்கள். மேலும் ஒரு சிலர் கிரிக்கெட்டில் நடுவராகவோ, வர்ணனையாளர்களாகவோ மாறிவிடுவார்கள். அந்த வகையில் 81 வயதிலும் , முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் வர்ணனையாளராக பணி புரிந்துவருகின்றனர் .
bill

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் 1960-70 காலகட்டங்களில் விளையாடி வந்த பில் லாரி மற்றும் இயன் சாப்பல் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவர்கள் இருவரின் ஓய்வுக்கு பின்னரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளிலின் வர்ணனையாளர்களாக மாறிவிட்டனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இவர்களது வர்ணனைகளை கேட்காமல் இருக்க முடியாது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேனல் நன் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அங்கு நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பும் கிரிக்கெட் போட்டிகளில் பில் லாரி மற்றும் இயன் வர்ணனையாளர்களாக பனி புரிந்து வந்தனர்.

இந்நிலையில் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் செவன் நெட்வொர்க்ஸ் கிரிக்கெட் அங்கு நடக்கும் கிரிக்கெட் போட்டிகளின் உரிமையை பெற்றது. தங்களுக்காக வர்ணனை செய்யும்படி லாரி மற்றும் சாப்பலை அந்த டிவிக்கள் கேட்டுக் கொண்டன. ஆனால் இந்த தள்ளுபடியை அவர்கள் மறுத்துள்ளனர்.
bill-lawry

இந்நிலையில் சேனல் நைனின் நிறுவனம் , வைட் வோர்ல்ட் ஆப் ஸ்போர்ட்ஸ் என்ற இணையதளத்தில் தொடர்ந்து வர்ணனை செய்யும் ஒப்பந்தத்தை அவர்களுடன் சேனல் நைன் செய்துள்ளது. இதனால் மீண்டும் வர்ணனையாளர்களாக தங்கள் பணியை தொடரும் 80 வயதை கடந்த லாரி மற்றும் சாப்பல் ஆகிய இருவரும் , இப்போதைக்கு தாங்கள் ஒய்வு பெறுவதை பற்றி யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement