கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் எட்மன்ட் ராயல் அணியில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கிறிஸ் லேன் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், இரு போட்டிகள் முடிந்த நிலையில் இவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது இதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரரான இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ஹைத்ராபாத் அணியிலும் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே இவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. ஐபிஎல் போட்டிக்கு பின்னர் இவருக்கு காயம் குணமாகி விட்டது என்ற தெரிந்த பின்னரே கிரிக்கெட் போட்டிகள் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் இவருக்கு கனடா நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் விளையாட அனுமதி அளிக்கவில்லை என்று தகவலகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இ எஸ் பி என் கிரி இன்போவில் வெளியிட்ட தகவலின்படி ‘கிறிஸ் முழுமையாக குணமடைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு ஒய்வு அளித்துள்ளது. அவர் ஐபிஎல் போட்டிகளில் கூட சில பல கட்டுப்பாடுகளுடன் தான் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
Watching the @GT20Canada ???? Looks quality cricket and challenging conditions, great way to expand your own game. Wish I was there???? See you in the Caribbean ????????♂️
— Chris Lynn (@lynny50) June 28, 2018
அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதால் அவரை இனிவரும் தொடர்களில் விளையாடும் அளவிற்கு அவரது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அணி நிர்வாகம் எண்ணுகிறது. அதே போல வரும் செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ள காரேபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.’ என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் 9.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் கிரிஸ் லேன். மேலும், கொல்கத்தா அணியில் அதிரடியாக விளையாடி வந்த இவர், 16 போட்டிகளில் விளையாடி 491 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடதக்கது.