டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த அறிய சாதனையை படைக்கும் அபாரமான வாய்ப்பு பும்ராவுக்கு உள்ளது – வால்ஷ் கணிப்பு

ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்த ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 20 வயது வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார். இவர் ஐபிஎல் தொடரில் வீழ்த்திய முதல் விக்கெட் விராட் கோலியின் விக்கெட். அப்போதிலிருந்தே இவருக்குல் திறமை ஒளிந்திருக்கிறது. தற்போது இந்தியாவின் மூன்று விதமான போட்டிகளுக்கும் பந்துவீச்சு கதாநாயகனாக இவர் தான் இருக்கிறார். .
Bumrah

தொடர்ந்து அனைத்து விதமான போட்டிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். குறிப்பாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் வீச்சாளர் கர்ட்னி வால்ஷ், ஜஸ்பிரித் பும்ரா எதிர்காலம் பற்றியும் அவர் டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்வார் என்பது பற்றியும் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்….

ஜஸ்பிரித் பும்ரா ஒரு அபாரமான பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவரது கால்கள் மிகவும் பிரச்சனைக்கு உரிய வகையில் சென்று கொண்டிருப்பதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், அதுதான் அவருடைய தனித்துவமும். மற்ற பந்துவீச்சாளர்கள் இடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதே அந்த ஓட்டம் தான்.

Bumrah

அவர் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற டெஸ்ட் பந்து வீச்சாளர்களை போல நீண்ட காலத்திற்கு விளையாடக்கூடிய பந்துவீச்சாளர் பும்ரா. முதன் முதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளராக 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Bumrah-1

- Advertisement -

இந்த சாதனையை இவரால்தான் முறியடிக்க முடியும் என்றும் பும்ராவிற்கு அந்த சாதனையை தகர்ப்பதற்கான திறமையும் வயதும் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் கர்ட்னி வால்ஷ்.