சாதிக்க நினைத்த கோலி. சல்யூட் அடித்து வெளியேற்றிய காட்ரெல் – விவரம் இதோ

Cottrell
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Kohli-2

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் 15 பந்துகளை சந்தித்த நிலையில் 6 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் கோலி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த போட்டியில் களமிறங்கினார். டி20 போட்டிகளில் மிகச்சிறந்த பார்மில் இருந்த கோலி இந்த ஒருநாள் போட்டியிலும் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தான் சந்தித்த மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்.

பின்னர் இந்த இன்னிங்சை பெரிய ரன் குவிப்பாக மாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஏழாவது ஓவரை வீசிய காட்ரெலின் கடைசி பந்தில் பந்தை தட்டி விட நினைத்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாகி ஆட்டமிழந்தார். கோலியின் இந்த விக்கெட்டை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான காட்ரெல் தனது வழக்கமான பாணியில் சல்யூட் செலிப்ரேஷன் செய்து கோலியை வழியனுப்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் டி20 தொடரின் போது கோலியை ஏற்கனவே இதுபோன்று நோட்புக் செலிப்ரேஷன் செய்த வில்லியம்சை கோலி அந்த தொடரில் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த ஒருநாள் தொடரிலும் காட்ரெலையும் வரும் போட்டிகளில் கோலி விலாசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

Advertisement