தோனியுடன் சண்டையா..? சேவாக் போன்று முடித்துவிட வேண்டாம்..? – அஸ்வின் புலம்பல்

ashwin

இந்திய அணியில் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளராக இருந்து வருகிறார் அஸ்வின், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷேவாக்கை முடித்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என்று வெளிப்படையாக கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அளவில் விளையாடப்படும் ஐபிஎல் போட்டிகளை போலவே , தமிழக அளவில் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது சீசன் வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடக்கவுள்ளது. இதில் திண்டுக்கல் அணியின் அணி தலைவராக இருந்து வருகிறார் அஸ்வின்..

இந்நிலையில் திண்டுக்கல் டிராகன் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பங்குபெற்ற அஸ்வின் கூறுகையில்”தோனிக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சக வீரர்கள் போல அவரும் ஒருவர். ஷேவாகிற்கும், தோனிக்கு பனி போர் என்று கூறி ஷேவாக்கை முடித்துவிட்டது போல என்னையும் முடித்து விட வேண்டாம் ” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

சமீப காலமாக தோனிக்கு, அஸ்வினிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தோனியுடன் விளையாடி வந்த அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு தாவி விட்டார். ஏற்கனவே தோனிக்கும், ஷேவாகிற்கும் பிரச்சனை இருந்ததால் தான் ஷேவாக் இந்திய அணியில் இருந்து விலகினார் என்றும் தகவல்கள் வெளியாகின.