சர்ச்சைக்குரிய பயிற்சியாளரின் அடுத்த பலிகடா இவர்தான்…ஒவ்வொருவரையாக அணியில் இருந்து நீக்குவது தான் இவர் வேலை ! – யார் தெரியுமா?

Mike

முன்னதாக இவர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது சர்ச்சைகளில் சிக்கி அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார்.தற்போது பாகிஸ்தானின் பயிற்சியாளரான பின்னர் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களாக இருந்த அக்மல் சகோதரர்கள் மற்றும் முகமது அமீர் போன்றவர்களை கட்டம்கட்டி அணியிலிருந்து வெளியேற்றினார்.தற்போது அவரது பட்டியலில் அடுத்ததாக இடம் பிடித்துள்ளார் வகாப் ரியாஸ்.

riaz

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிற்சி போட்டிகளுக்கான அணியில் கூட வகாப் ரியாஸின் பெயர் வராத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளார் ஆர்தர்.கடந்த இரண்டு ஆண்டுகளில் அணிக்காக ஒருவெற்றியை கூட பெற்றுத்தராத வீரர் வகாப் ரியாஸ் என்று மிக்கி ஆர்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து விளையாட்டு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “வகாப் ரியாஸ் எங்கள் அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருபோட்டியை கூட உருப்படியாக விளையாடி வெற்றிபெற வைக்கவில்லை.

அணியின் மூத்த வீரர்கள் அணிக்காக விளையாடி தங்களது தரத்தை நிரூபித்து காட்டிடவேண்டும்.அதுமுடியாத பட்சத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.வகாப் ரியாஸை அணியிலிருந்து வெளியேற்றுவது கடினமான காரியம் தான் என்றாலும் தற்போதைக்கு வேறு வழியுமில்லை. வீரர்களும் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு விளையாடிட வேண்டும் என்றார்.உடற்தகுதியை நிரூபிக்க போதுமான புள்ளிகளான 17.4 வகாப் ரியாஸ் எடுத்திருந்த போதிலும் கூட, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் 19 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்று அடாவடி செய்து 18புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ள அப்ரிடியை அணியில் சேர்த்துக்கொண்டுள்ளார்.

arthur

மிக்கி ஆர்தர் பேசும்போது “பந்துவீசும் போது நான் வகாபை குறைசொல்லவே மாட்டேன். பயிற்சியின் போது அவர் சிறப்பாக செயல்படுவதில்லை என சாடியுள்ளார்.மேலும் பேசிய அவர் “பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஸ்டைலை மாற்ற விரும்புகிறேன். அணிக்காக தங்களை அர்ப்பணித்து விளையாடிடும் வீரர்களையே நான் விரும்புகின்றேன். அணிக்காக இவ்வளவு செய்தால் மட்டும் போதும் என்புவர்கள் மீது எனக்கு ஆர்வம் இருப்பதுமில்லை. அணிக்காக சிறப்பாக செயல்படும் வீரர்களின் பெயர்கள் அணியிலிருந்து தூக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் வகாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் முக்கியமான மற்றும் திறமையான வீரரும் கூட.2016முதல் அவர் விளையாடிய 11டெஸ்ட்களில் 40விக்கெட்டுகளை குவித்துள்ளார். இதைவிட பெரியதாக அவர் என்ன எதிர்பார்க்கின்றார் என புரியவில்லை.திறமையான வீரர்களை ஓரம்கட்டிவிட்டு எப்படி பாகிஸ்தான் அணியை சிறந்த அணியாக உருவாக்கிடுவார் என்றுதான் தற்போது பலரும் மிக்கி ஆர்தர் மீது முன்வைக்கப்படும் கேள்வி.