இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் இவர்தான். இவர் தலைமையில் இந்தியா வெயிட்டா இருக்கு – மே.இ வீரர் புகழாரம்

Lloyd
- Advertisement -

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மிகச்சிறந்த வகையில் விளையாடி வருகிறது. அவர்களிடம் எல்லா வகையான வீரர்களும் இருக்கின்றனர். நல்ல பிட்னஸ் உடன் வெரைட்டியாக பெர்பார்மன்ஸ் செய்யும் வீரர்கள் அடுத்தடுத்து இந்திய அணிக்காக வந்து கொண்டு இருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் தற்போது உள்ள இந்திய அணி தான் மிக பலம் வாய்ந்த அணியாக தெரிகிறது என்று கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.

ind

சென்ற ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்கின்ற கணக்கில் மிக அபாரமாக கைப்பற்றியது. அதை அடுத்து டி20 தொடரையும் 2-1 என்கிற கணக்கில் மிக அபாரமாக கைப்பற்றியது.ஒரு நாள் போட்டி தொடரில் மட்டும் 1-2 என்கிற கணக்கில் கைப்பற்ற தவறியது.

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது நடைபெற்று முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், டி20 தொடரையும் இந்தியா அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தியது.மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ind

இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசிய கிளைவ் லாயிட் : கபில்தேவ் தொடங்கி கங்குலி , தோனி போன்ற ஜாம்பவான் கேப்டன்கள் வரிசையில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த போதிலும், தற்போது விராட் கோலியின் தலைமையின் கீழ் இருக்கும் இந்திய அணி என்னை பொறுத்தவரையில் மிகப் பலம் வாய்ந்த அணியாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

llyod

அனைத்து வகைகளிலும் இந்திய அணி சிறந்த அணியாக விளங்குகிறது. இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் ,மேலும் சூழலுக்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்கிற அணுகுமுறையை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்கள். தற்பொழுது உள்ள இந்திய அணி இன்னும் சில ஆண்டுகளுக்கு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கிளைவ் லாயிட் கூறி முடித்தார்.

Advertisement