இந்திய அணியில் புதிய மாற்றம். இனி இரண்டு கேப்டன்கள் இருப்பது உறுதி

Kohli
- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு தான் அணிக்குள் எவ்வளவு கருது வேறுபாடுகள் உள்ளன, அணிக்குள்ளேயே ரோஹித், கோலி என இரு பிரிவுகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதோடு இந்திய அணியில் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள் அன்றும் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர் என்றும் பலர் குற்றம் சாட்டினார்.

ravi koli 2

- Advertisement -

 

இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டும் என்ற குரல் இந்திய அணிக்குள் வலுத்து வருகிறது என்று பிரபல இந்தி நாளேடான டேனிக் ஜாக்ரன் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுகிறது என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் கேப்டன் ஆக்க நினைக்கும் பிசிசிஐ, டெஸ்ட் போட்டி மற்றும் 50 ஓவர், 20 ஓவர் போட்டிக்கு என தனித்தனி கேப்டன் பொறுப்பு இருவருக்கும் கொடுக்கலாம் என பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கோலியை டெஸ்ட் கேப்டனாகவும், ரோகித் சர்மாவை ஒரு நாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Rohith

இது குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவத்திற்கு பேட்டி அளித்த கிரிக்கேட் வாரிய குழுவை சேர்ந்த மூத்த நிர்வகி ஒருவர் கூறியதாவது;-

ஒரு போட்டி முடிந்த பிறகு, அடுத்த போட்டிக்கு தயாராவது தான் ஒரு நல்ல அணிக்கு அழகு, அந்த வகையில் அணையில் சில மாற்றங்களோடு அடுத்த போட்டிக்கு இந்திய அணி தயாராக வாய்ப்புள்ளது. அதோடு 50 ஓவர் போட்டிகளில் ரோகித் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு இது ஒரு சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. அடுத்த உலககோப்பைக்கு நாம் இப்போதில் இருந்தே திட்டமிடும்போது சில மாற்றங்கள் நிகழத்தான் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

viratkoli

அதிகாரப்பூர்வ அறிவுப்பு வரும்வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கவேண்டும். அதன் பிறகு தான் உண்மை நிலை என்ன என்பது நமக்கு தெரியும். அதுவரை பல வதந்திகள் சுற்றி சுற்றி வருவது இயல்புதான்.

Advertisement