நலம் விசாரித்த ரிஷப் பண்ட்டிடம் அதுக்காக சாரி கேட்டேன்.. சுப்மன் கில்லும் பாராட்டினாரு.. ஓக்ஸ் பேட்டி

Chris Woakes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட 2 – 2 டெஸ்ட் தொடரை என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா 10 ரன்னுக்கும் குறைவாக மிராக்கள் வெற்றியைப் பெற்றது.

முன்னதாக அத்தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் வெற்றிக்காகத் தங்களுடைய அனைத்தையும் கொடுத்தார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த பந்து பாதத்தில் பட்டதால் பலத்த காயமடைந்த அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சாரி கேட்ட ஓக்ஸ்:

இருப்பினும் இந்திய அணிக்காக காயத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடிய ரிசப் பண்ட் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அதே போல ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்தின் கிறிஸ் ஓக்ஸ் ஃபீல்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயமடைந்தார். இருப்பினும் கடைசி நாளில் தனது அணியின் தோல்வியைத் தவிர்ப்பதற்காக அவர் ஒற்றைக் கையுடன் பேட்டிங் செய்ய வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தம்முடைய கை எப்படி இருக்கிறது? என்று ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராமில் நலம் விசாரித்ததாக கிறிஸ் ஓக்ஸ் கூறியுள்ளார். அப்போது தெரியாதத்தனமாக பாதத்தை உடைத்ததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் ஓக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கேப்டன் கில் பாராட்டியது குறித்தும் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பாராட்டிய கில்:

“ரிஷப் பண்ட் என்னுடைய புகைப்படத்தில் சல்யூட் செய்யும் எமோஜியை போட்டு வாழ்த்தியதை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். அதனால அவருக்கு நன்றி சொல்லி பதிலும் கொடுத்தேன். அதற்கு “உங்களுடைய அன்பைப் பாராட்டுகிறேன், உங்களின் கால் நன்றாக இருக்குமென்று நம்புகிறேன்” என ரிஷப் பதிலளித்தார். அதன் பின்பும் அனைத்தும் நலமாக இருக்கும் என்று நம்புகிறேன். விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன், இன்னொரு நாள் சந்திப்போம் என்று ரிஷப் மற்றொரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்”

இதையும் படிங்க: நம்பர் ஒன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 ஓவருக்கு மேலே இதை செய்யல.. 10க்கு 6 மார்க் தான்.. இர்பான் பதான் அதிருப்தி

“அவரிடம் காலை உடைத்ததற்காக நானும் மன்னிப்பு கேட்டேன். உங்களுடைய முடிவு தைரியமானது என்று சுப்மன் கில் பாராட்டினார். அவரிடம் உங்களுக்கு நம்ப முடியாத தொடர் அமைந்தது, நன்றாக விளையாடினீர்கள், இரு அணிக்கும் பாராட்டுக்கள் என்று சொன்னேன். உண்மையில் இரு அணிகளும் இந்தக் கடினமான தொடரில் வெற்றிகாகக் கடுமையாகப் போராடினார்கள். கடைசியில் அது சமனில் முடிந்தது நியாயமான உணர்வைக் கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement