10 கோடி கொடுத்து மொக்கை வீரரை விலைக்கு வாங்கிய பெங்களூரு அணி – கழுவி ஊற்றும் ரசிகர்கள்

RCB
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

auction-1

- Advertisement -

இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பெங்களூர் அணி பின்ச், ஸ்டெயின், கேன் ரிச்சர்ட்சன் போன்ற சில முக்கிய வீரர்களை ஏலம் எடுத்தாலும் அவர்களின் ஒரு தேர்வு மட்டும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறது. அந்த தேர்வு யாதெனில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் க்றிஸ் மோரிசை 10 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளனர்.

10 கோடிக்கு ஏலம் எடுக்கும் அளவிற்கு அவர் தகுதியானவரா ? மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். மேலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு போட்டிகளை அவர் இதுவரை விளையாடியுள்ளாரா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறவேண்டும். மேலும் இவ்வளவு பெரிய தொகைக்கு அவருக்கு தகுந்தவர் தானா ? என்பது போல பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.

morris

பெங்களூர் அணி பேட்டிங்கில் எப்போதும் ஸ்ட்ராங் தான். பந்துவீச்சு பலமின்றி கடந்த 2 ஆண்டுகளாக தவித்துவருவதை நாம் பார்த்து வருகிறோம். மேலும் 10 கோடி கொடுத்து அவரை எடுப்பதற்கு பதிலாக மேலும் சில பந்துவீச்சாளர்களை எடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement