எனக்கு கிரிக்கெட் முக்கியமில்லை. உயிர் தான் முக்கியம் நான் ஊருக்கு போறேன் – பாதியில் கிளம்பிய ஆஸ்திரேலிய வீரர்

Lynn
- Advertisement -

பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூர் அணிக்காக விளையாடி வருபவர் ஆஸ்திரேலியாவ்8ன் கிறிஸ் லின்.

chris

- Advertisement -

இவர் சதமடித்து தனது அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு சென்றுள்ளார். தற்போது வரை கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேலான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன

ஆனால் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும், ரசிகர்களும் மைதானத்திற்கு வந்தபாடில்லை. அதனால் போட்டிகள் அனைத்தும் மூடிய மைதானத்திற்கு நடைபெற்றுவருகின்றன. இதனால் ரசிகர்கள் ஆவலின்றி இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

lynn1

இதன் காரணமாக தற்போது கிறிஸ்டின் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட்டை விட வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளார் .

- Advertisement -

மேலும் துரதிருஷ்டவசமாக இந்த சூழ்நிலையில் சொந்த நாடு திரும்ப முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் எனது நேரம் மிக நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் அவர். மேலும் இறுதி போட்டியில் விளையாடுவதை விட தனது சொந்த நலனே முக்கியம் என்ற காரணத்தினால் பாகிஸ்தான் டி20 லீக்கில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

Lynn

உலகம் முழுதும் இதுவரை இதேபோன்று கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் தடை பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி. எல் தொடரும் கொரோனா பாதிப்பினால் தள்ளி போய்யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement