இனி இந்திய வீரரை நம்பி பயனில்லை. வெளிநாட்டு வீரரை டீமுக்குள் கொண்டு வந்த – ரவீந்திர ஜடேஜா

Jadeja-1
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடைபெற்றுவரும் 15வது ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 131 ரன்களை மட்டுமே குவித்ததால் தோல்வியை தழுவிய சென்னை அணியானது அடுத்ததாக லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் குவித்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

CSK-1

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி இப்படி இரண்டு துவக்க போட்டிகளிலும் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறை. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளில் இருந்து மீண்டு வரும் வகையில் இன்று தங்களது மூன்றாவது போட்டியை பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி விளையாட துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி தற்போது சிஎஸ்கே பவுலிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின்போது சென்னை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் இரண்டு போட்டிகளில் பவுலிங்கில் சொதப்பிய துஷார் பாண்டே வெளியேற்றப்பட்டுள்ளார்.

csk practice

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் ஜோர்டானை அணிக்குள் கொண்டு வரப் பட்டுள்ளார். சென்னை அணி என்னதான் பெரிய ரன் குவிப்பை வழங்கினாலும் பந்துவீச்சில் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதினால் தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

- Advertisement -

இளம் வீரரான துஷார் பாண்டே சில போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அதிகளவு ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளதால் தற்போது இந்த போட்டியில் கிறிஸ் ஜோர்டானை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க : கில்கிறிஸ்ட், ரிச்சர்ட்ஸ் சாதனையை அசால்ட்டாக உடைத்த ஆஸி சிங்கப்பெண் – உலகசாதனை (குவியும் வாழ்த்துக்கள்)

பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டுமெனில் பஞ்சாப் அணியை குறைந்த ரன்களில் சுருட்டி இலக்கை சிறிதாக்கி கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement