அவர் எப்படி பட்ட ஒரு வீரர்னு நான் சொல்ல வேண்டியது இல்ல.. விராட் கோலிக்கு ஆதரவாக – கிரிஸ் கெயில் கூறியது என்ன?

Gayle
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளானது தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டிக்கு சென்றடைந்துள்ளனர். இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதி போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் பலரது மத்தியிலும் வருத்தத்தை அளிக்கும் விதமாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் நடைபெற்று வரும் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் வழக்கம் போல தனது மூன்றாவது இடத்தில் களமிறங்காமல் துவக்க வீரராக களம் இறங்கும் விராட் கோலி 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது பார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளன.

அதோடு அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் விராட் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :

- Advertisement -

இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார் வீரர்களுக்கு நடப்பது வழக்கம் தான். அதிலும் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரருக்கு நடக்கும்போது இது பேசுபொருளாகிறது. முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கத்தை செலுத்தினார் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இது போன்ற சரிவு யாருக்கும் ஏற்படலாம் ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம் அவர் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : 603/6 ரன்ஸ்.. ஆஸ்திரேலியாவை முந்திய இந்தியா சென்னை மண்ணில் புதிய உலக சாதனை.. தடுமாறும் தெ.ஆ

அவரை போன்ற ஒரு வீரர் மீண்டும் பார்மை மீட்டெடுப்பது என்பது மிக எளிதானது. சில சமயங்களில் இது போன்ற பெரிய வீரர்கள் சரிவை சந்திப்பது இயல்பு. அதனால் அவரை நீக்க முடியாது அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்த வீரர் என்பதை அனைவரும் அறிவோம். எனவே நிச்சயம் அவர் இறுதிப் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என கிரிஸ் கெயில் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement