கோலியின் சதம்.! இந்தியாவால் இங்கிலாந்தை இதை செய்ய முடியுமா.! கிறிஸ் கெயில் அதிரடி.!

gayle
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணியக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 149 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கோலியின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் கூறி வரும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் கோலியின் சதம் குறித்தும், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

kholi

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கோலியின் அதிரடி சதம் குறித்து பேசிய மேற்கிந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிரிஸ் கெயில் பேசுகையில்”நான் விராட் கோலியின் பேட்டிங்கின் தொகுப்பை மட்டும் பார்த்தேன். அது மிகவும் ஒரு அற்புதமான சதமாக இருந்தது. இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து நம்பிக்கை இழந்து இருந்த போது, நடு வரிசையில் நின்று விராட் கோலி சதமடித்து அணிக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது. இந்த தொடரை இந்திய அணி அற்புதமாக தொடங்கி இருக்கிறது.” என்று தெரிவித்துளளார்.

- Advertisement -

அதே போல இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்துமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கெயில் ‘ஏன் இந்திய அணியால் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியாத, வீழ்த்த முடியாத அளவிற்கு இங்கிலாந்து அணி என்ன வெல்ல முடியாத அணியா? அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.

chris-gayle

இந்திய அணி கடந்த 2007 ஆம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைபற்றியது தான் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் பெற்ற கடைசி டெஸ்ட் வெற்றியாகும். அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 9 போட்டிகள் இந்தியாவிலும் 5 போட்டிகள் இங்கிலாந்து மண்ணிலும் விளையாடியுள்ளார். இந்த 14 போட்டிகளில் கோலி 992 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கும், கோலிக்கும் ஒரு முக்கிய தொடராக அமைந்திருகிறது.

Advertisement