- Advertisement -
உலக கிரிக்கெட்

Chris Gayle : உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக கெயிலுக்கு கவுரவத்தை அளித்த வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் – விவரம் இதோ

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் 39 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ மற்றும் அதிரடி வீரரான கிரிஸ் கெயில் அணியில் இடம்பிடித்தார். இந்த உலகக்கோப்பை தொடரோடு தனது 5 ஆவது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் மகத்தான சாதனையை படைக்க உள்ளார் கெயில்.

- Advertisement -

இதற்கு முன்பாக அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக உலகக்கோப்பை தொடருக்குமுன் கிரிஸ் கெயிலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பினை வழங்கியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் அவரது அனுபவம் இளம் வீரர்களுக்கு பயன்படும் என்பதாலும், முக்கியமான சூழ்நிலைகளில் அவரது அறிவுரை அணிக்கு பயனளிக்கும் என்பதாலும் அவருக்கு துணைக்கேப்டன் பதவியை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் வழங்கியுள்ளது.

தோனியின் அறிவுரைகள் எவ்வாறு இந்திய அணிக்கு உதவுமோ அதேபோன்று அனுபவ வீரரான கெயில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவார் என்று அந்த அணி நம்புகிறது. உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோல்டர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் கலக்கி வரும் ரசல், பூரான், ஹெட்மயர் மற்றும் எவின் லீவிஸ் மற்றும் பிராத்ஒயிட் ஆகியோர் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by