கங்குலி ரூல்ஸை மதிக்கல.. இந்தியா பணத்தை வெச்சு அங்க அரசியல் செய்றது உண்மையே.. கிறிஸ் ப்ராட் குற்றசாட்டு

Chris Broad
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு தரத்தைக் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியாக ஆரம்பக் காலங்களில் இந்திய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பிசிசிஐ தடுமாறியது. நாளடைவில் ஐபிஎல் தொடரை துவக்கியதால் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் பிசிசிஐ இன்று ஐசிசியை விட உலகின் பணக்கார வாரியமாக திகழ்கிறது.

அதன் காரணமாக பணத்தை வைத்து இந்தியா கிரிக்கெட்டில் சாதிப்பதாக பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாட்டு ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாகும். குறிப்பாக இந்தியா நடுவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு வெற்றிகளைக் குவிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்தியா பணத்தை வைத்து ஐசிசியில் அரசியல் செய்வது உண்மை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மற்றும் அம்பயர் கிறிஸ் ப்ராட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் அரசியல்:

தற்போது ஐசிசி அம்பயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் ஒருமுறை சௌரவ் கங்குலி விதிமுறையை மீறி செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து வீரரான அவர் இது பற்றி தி டெலிகிராப் பத்திரிக்கையில் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை போட்டியின் முடிவில் இந்தியா 3 – 4 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததால் அபராதம் அமைந்தது”

“அப்போது எனக்கு மேலிடத்திலிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் “இந்தியாவிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள், சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஏனெனில் அது இந்தியா” என்று சொல்லப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நாங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்தப் போட்டியில் மீண்டும் அதே விஷயம் நடந்தது”

- Advertisement -

முன்னாள் அம்பயர் குற்றசாட்டு:

“சௌரவ் கங்குலி எதையும் கேட்கவில்லை. அப்போது மேலிடத்திற்கு தொலைபேசியில் அழைத்த நான் “இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு கங்குலியை மட்டும் செய்யுங்கள் என்று பதில் வந்தது. இப்படி ஆரம்பம் முதலே அரசியல் கலந்திருந்தது. தற்போதுள்ள பலரும் கிரிக்கெட்டில் இருக்கும் அரசியல் ரீதியான விஷயங்களை நன்றாக தெரிந்துள்ளனர்”

இதையும் படிங்க: இதுலயே எப்படி இருக்கார்ன்னு புரிஞ்சுக்கோங்க.. ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நலம் பற்றி கேப்டன் சூரியகுமார் பேட்டி

“அந்த காலகட்டங்களில் எங்களுக்கு ஐசிசி அம்பயர்களின் மேனேஜர் வின்ஸ வேன் டெர் ஆதரவாக இருந்தார். ஏனெனில் அவர் கிரிக்கெட் பின்னணி கொண்ட சூழ்நிலையிலிருந்து வந்தார். இருப்பினும் அவர் பணியிலிருந்து விடைபெற்ற பின் மீண்டும் விஷயங்கள் பலவீனமாக மாறின. இந்தியாவிடம் அனைத்து பணமும் இருப்பதால் தற்போது ஐசிசியை பல வகைகளில் கையாள்கிறார்கள். எனவே தற்போது நான் அங்கே பணியாற்றவில்லை என்பதில் மகிழ்ச்சி. ஏனெனில் அங்கே தற்போது அதிகப்படியான அரசியல் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement