டி20 உலககோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவைதான் – ஆகாஷ் சோப்ரா

Chopra

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஏழாவது டி20 உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து நாட்டு கிரிக்கெட் நிராகங்களும் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்தன் காரணமாக தற்போது அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

cup

இதன் காரணமாக தற்போது அடுத்து வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற இருக்கும் அணி எது ? என்றும், ஆதிக்கம் செலுத்தப்போகும் அணி ? எது என்ன என்பது குறித்த பல கருத்துக்கள் முன்னாள் வீரர்களின் மூலம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது சமூக வலைதளம் மூலம் இந்த டி20 தொடர் குறித்த தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் எந்த நான்கு அணிகள் இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து கேட்கப்பட்ட ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று சரியான பதிலை அளித்துள்ளார். அவரது இந்தப் பதில் சரியான பதில் என்பதன் காரணமாக இந்த பதிவு ரசிகர்களால் அதில் அதிக அளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement