பும்ரா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடக்கூடாது – முன்னாள் வீரர் அதிரடி கருத்து

Bumrah
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்து முடித்து உள்ளது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

bumrah

- Advertisement -

இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இது முக்கியமான ஒரு தொடராக இந்திய அணிக்கு அமைய உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேத்தன் சர்மா இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த தொடரில் விளையாடக்கூடாது. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை அணியில் இணைத்து விளையாடலாம் ஏனெனில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஓய்வின்றி மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் விளையாடுவது என்பது சாதாரண விடயம் கிடையாது.

Bumrah-1

இதனால் பும்ராவிற்கு சற்று ஓய்வு தேவை எனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்து அடுத்து வரும் தொடர்களில் விளையாட வைக்கலாம் என்பது எனது கருத்து என்று பும்ரா குறித்து சேத்தன் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement