Hat – Trick : மீண்டும் என்னை ரசிகர்களின் நியாபகத்துக்கு கொண்டுவந்த ஷமிக்கு நன்றி – சேத்தன் சர்மா

நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில்

Chetan-Sharma
- Advertisement -

நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி சிறப்பாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Shami-1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி உலக கோப்பை தொடரில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்தார். அதன்படி அவர் கடைசிவரை வீசும்பொழுது ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். 9.5 ஓவர்கள் வீசி சாமி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இந்த சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சர்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது ஷமி எடுத்த ஹாட்ரிக் மிக சிறப்பான ஒன்றாகும். இந்திய அணி இப்போது நல்ல நிலைமையில் உள்ளது அனைவரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள் குறிப்பாக பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது.

Shami

புவனேஷ்வர்குமார் காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக இறங்கி ஷமி ஹாட்ரிக் சாதனை படைத்தது மகிழ்ச்சியே அவரின் மூலமாக தற்போது மீண்டும் என் பெயர் ரசிகர்கள் மத்தியில் வருவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் நான் எடுத்த ஹேட்ரிக் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது என் பெயரை திரும்பவும் வெளிக்கொண்டுவந்துள்ளது. இதற்கு ஷமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சேத்தன் சர்மா கூறினார்.

Advertisement