எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் இவர்களுக்காக சமர்ப்பிக்கிறேன் – உருக்கமாக பேசிய சேத்தன் சகாரியா

Sakariya

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை மாதம் நடைபெறவுள்ள 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல் முறையாக தேர்வாகி விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

sakariya

ஏனெனில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய சக்காரியா தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அசத்தினார். அதன்பிறகு தற்போது அவர் இந்திய அணியிலேயே தேர்வாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் தனது சகோதரரை இழந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தந்தையையும் இழந்து மிகவும் வருத்தத்தில் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளது குறித்து சக்காரியா பேசுகையில் : நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு. என்னுடைய அப்பா என்னுடன் இருந்திருந்தால் நிச்சயம் இதை பார்த்து மகிழ்ந்து இருப்பார். கடந்த ஓராண்டு காலமாக என் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன். கடந்த சில மாதங்கள் எனக்கு உணர்ச்சிகரமாக இருந்துள்ளது.

sakariya 2

ஐபிஎல் விளையாட தேர்வான போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது என் சகோதரன் மற்றும் தந்தை இழந்துள்ள நிலையில் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. என் தந்தையின் மரணம் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை என் தந்தைக்கும் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் என் தாய்க்கும் சமர்ப்பிக்கிறேன் என சேத்தன் சக்காரியா உருக்கமாக கூறியுள்ளார்.

- Advertisement -

Sakariya

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : ஐபிஎல் தொடரின்போது நான் சிறப்பாக செயல்பட்டதால் என்னை பற்றி அனைவரும் பேசினர். அதனால் நான் நிச்சயம் இந்திய அணிக்கு நெட் பவுலராக தேர்வாவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது எனக்கு இந்திய அணியிலேயே வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement