தோல்விக்கு காரணம் இதுதான்..! தோனி அல்ல..! தவறுக்கு பொறுப்பேற்ற ஸ்டீபன் பிளெம்மிங்..! – விவரம் உள்ளே

flemming
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 11 வது சீசனின் லீக் போட்டி ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்து. மேலும் இந்த தொடரில் தனது அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார், தமது ஆசைகளுக்கும் அவர் தடைவித்து விட்டார் என்று தோனி தெரிவித்திருக்கிறார்.

msdhoni

- Advertisement -

நேற்று (மே 11) நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஒவர்களா முடிவில் 176 ரன்களை எடுத்திருந்தது.பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டுமே 60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து அணியின் பாதி வெற்றி இலக்கை அடித்து முடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்யசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு முன்னர் டாஸ் வென்று பேட்டியளித்த தோனி கூறுகையில் “எங்கள் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெம்மிங் எனக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனக்கு போட்டியில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்பது தான் பிடிக்கும். அதனால் நான் பேட்டிங் ஆர்டரில் 2 அல்லது 3 வைத்து வரிசையில் களமிறங்குகிறேன் என்று எனது பயிற்சியாளரை கேட்டேன். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை ” என்று தெரிவித்திருந்தார்.

jos

பேட்டிங் ஆர்டரில் 5 அல்லது 6 வது வரிசையில் இறங்கும் தோனிக்கு 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்களில் தான் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் அவருக்கு நின்று ஆட போதுமான நேரம் கிடைப்பது இல்லை. இருப்பினும் அவர் இந்த தொடரில் அருமையாக விளையாடி 10 போட்டிகளில் 360 ரன்களை குவித்துள்ளார். ஒருவேளை தோனி கூறியது போல அவர் 2 அல்லது 3 வது பேட்டிங் தரவரிசையில் இறங்கினால் இன்னும் சிறப்பாக விளையாடுவார்.

Advertisement