தோனி கவலை..! இறுதி போட்டியிலும் இது நடந்தால்..! சென்னையின் வெற்றி கேள்விக்குறியா..?

msdhoni
- Advertisement -

ஐ.பி.எல் போட்டியின் இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டிசெவ்வாய் கிழமை (மே 22) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வரும் ஞாற்றுக்கிழமை (மே 27) நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும், சென்னை அணியில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது.

அது சென்னை அணியின் பந்து வீச்சு. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.இந்த தொடரில் சென்னை அணி விளையாடிய அணைத்து பெரும்பாலான போட்டிகளில் எதிரணிகள் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். சென்னை அணியின் மோசமான பந்துவீச்சை பற்றி போட்டி முடிந்ததும் தோனி பல முறை குறை கூறியுள்ளார். அனுபவ பந்துவீச்சாளரான பிராவோ கூட டெத் ஓவர்களில் சரியாக பந்து வீசாவில்ல்லை.

- Advertisement -

பின்னர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட இங்கிடி சிறப்பாக பந்து வீசுவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்தி வருகிறார். சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு தோனி பல அறிவுரைகளை கூறிவருகிறார். கடந்த செவ்வாய் கிழமை ஹைட்ரபாத்திற்கு எதிரான ஆட்டத்தின் போது கூட முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் 18 மற்றும் 20 வது ஓவர்களில் மட்டும் 37 ரன்களை அளித்திருந்தனர்.
dhoni
சென்னை அணியில் இங்கிடியை தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் அனைவரும் தோனியை கவர தவரவிட்டுள்ளனர். இன்னும் கோப்பைக்கு ஒரே ஒரு போட்டிதான் இருக்கின்ற நிலையில் சென்னை அணி இதே போன்று பந்து வீச்சை நம்பி விளையாடினாள் இறுதி போட்டியில் வெற்றி பெறுவது கொஞ்சம் கடினமாகி விடும்

Advertisement