IND vs BAN : யார் இந்த சாருலதா பாட்டி. அவர்களுடைய முழுவிவரம் – உள்ளே

உலக கோப்பை தொடரில் 40 ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது.

kohli-1
- Advertisement -

உலக கோப்பை தொடரில் 40 ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பங்களாதேஷ் இறுதிவரை போராடி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அது யாதெனில் இந்த போட்டியை நேரில் காண 87 வயது மூதாட்டி (இந்திய ரசிகை) மைதானத்திற்கு வந்து இருந்தார் அவருடைய பெயர் சாருலதா இந்திய தேசியக் கொடியினை முகத்தில் வரைந்துகொண்டு, தேசிய கொடி பதியப்பட்ட ஒரு சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும், பீப்பி ஊதி இந்திய அணியையும் , மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை அவர் உற்சாகப்படுத்தினார்.

இதுகுறித்து போட்டி முடிந்ததும் சாருலதா பாட்டி அளித்த பேட்டியில் : நான் ஆப்பிரிக்காவில் இருக்கும் போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். நான் முன்பு வேலை செய்து கொண்டிருந்தபோது கிரிக்கெட்டை டிவியில் பார்த்து கொண்டிருந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். அதனால் நேரில் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறேன். கண்டிப்பாக இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெல்லும். இந்திய அணி வெற்றி பெற நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Kohli 2

இந்த பாட்டி இன்று இணையத்தில் டிரண்டிங்கில் உள்ளார் என்பதும் மேலும் இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த பாட்டியை ஆதரித்து அவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் சாருலதா பாட்டியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement