எங்களால் அது முடியும்னு நெனச்சோம்.. போட்டி சமனில் முடிந்த பிறகு பேசிய – இலங்கை அணியின் கேப்டன்

Asalanka
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டி இரு அணிக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிவடைந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிசாங்கா 56 ரன்களையும், துனித் வெல்லாலகே 67 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 230 ரன்களை குவித்ததால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 58 ரன்களையும். அக்சர் பட்டேல் 33 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறுகையில் : இந்த போட்டியில் நிச்சயம் எங்களால் இந்திய அணியை சுருட்ட முடியும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஆனாலும் நாங்கள் இன்னும் சற்று அதிகமாக சிறப்பாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும். இருப்பினும் அவர்களை 230 ரன்களில் தடுத்து நிறுத்தியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் மதிய வேளையில் பந்து நன்றாக திரும்பியது. ஆனால் விளக்கு ஒளியின் கீழ் விளையாடிய போது பேட்டுக்கு ஈசியாக சென்றது.

இதையும் படிங்க : விராட் கோலி உலகிலேயே சிறந்தவர்.. இந்தியாவுக்காக அதை நாங்க ஜாலியா செஞ்சோம்.. தல தோனி பேட்டி

இருந்தாலும் இடது கை ஆட்டக்காரர்கள் களத்தில் இருக்கும்போது என்னால் சிறப்பாக பந்துவீச முடியும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டி இறுதியில் சமனில் முடிந்தது மகிழ்ச்சி தான். களத்தில் எங்களது அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக துனித் வெல்லாலகே மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர் என சரித் அசலங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement