இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி தர்மசாலா நகரில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீச படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆன 2ஆவது கிரிக்கெட் போட்டி சண்டிகர் நகரில் உள்ள மொகாலி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி மொஹாலி மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற சண்டிகர் போலீசார் இந்திய அணியின் நிர்வாகம் ஆன பிசிசி-ஐயிடம் 9 கோடி பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அதன் காரணத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி அவர்கள் கூறிய காரணமாவது : மொகாலி மைதானத்தில் போட்டி நடைபெறுவதற்கு போலீஸ் பாதுகாப்பிற்கும் மற்றபடி சண்டிகாரில் இருஅணி வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் அது குறித்த செயல்பாடுகள் அனைத்திற்கும் பிசிசிஐ நிதி செலவுகளை ஏற்க வேண்டும் என்றும் அதற்காக 9 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த செய்தியை இணையத்தின் வாயிலாக அறிந்த இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க லஞ்சமா ? என்று இணையத்தில் தங்களது கருத்துக்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.