- Advertisement -
உலக கிரிக்கெட்

ரோஹித் நீங்க பாகிஸ்தான் வர வேணாம்.. கேன்சல் செய்யப்பட்ட துவக்க விழா – என்ன காரணம்?

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி துவங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் விளையாட இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாட இருக்கின்றன.

ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லத்தேவையில்லை :

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரானது ஐசிசி-யின் தலைமையின் கீழ் நடக்கும் தொடர் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற இருப்பதினால் இந்த கோப்பையை கைப்பற்றுப்போம் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

வழக்கமாகவே ஐசிசி நடத்தும் தொடர்கள் என்றால் அந்த தொடருக்கு முன்னதாக அந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளை சேர்ந்த கேப்டன்களையும் அழைத்து கோப்பையுடன் போட்டோ சூட் நடத்துவது வழக்கம். மேலும் அந்த தொடர்ருக்கு முன்னதாக ஒரு துவக்க நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த துவக்க விழாவில் ரோகித் சர்மாவும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமே ஐசிசியுடன் ஆலோசித்து துவக்க விழாவினை கேன்சல் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் தற்போது இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. அதேபோன்று ஆஸ்திரேலியா அணியும் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர்கள் எல்லாம் பிப்ரவரி முதல் இரண்டாம் வாரம் வரை இருக்கின்றன. அதன்பிறகே இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பாகிஸ்தான் செல்ல முடியும். அதே போன்று இந்திய அணியும் பிப்ரவரி இரண்டாம் வாரம் தான் நேரடியாக துபாய் பயணிக்கிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

இதன் காரணமாக போதிய நேரம் அனைத்து கேப்டன்களுக்கும் இருக்காது என்பதனால் ஒரே நேரத்தில் அனைத்து கேப்டன்களையும் வரவழைத்து துவக்க நிகழ்ச்சியை நடத்துவது கடினம் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கராச்சி நகரில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான துவக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -